search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் விபத்து"

    சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் பெரிய சுவர் உடைந்து கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.



    தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஈரோட்டில் இன்று அதிகாலை அரசு ஆஸ்பத்திரியின் மேல்தள சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பகலும்- இரவும் என மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    பல நோயாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களின் உறவினர்களும் அவர்களுக்கு துணையாக ஆஸ்பத்திரியின் வெளிப்புற வளாகத்தில் இருப்பார்கள். இவர்களில் பலர் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் இரவில் படுத்திருப்பார்கள்.

    இதேபோல் நேற்று இரவும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மேல்தளத்தில் உள்ள சுவர் (சிலாப்) திடீரென இடிந்து கீழே விழுந்தது.

    பயங்கர சத்தத்துடன் சிலாப் இடிந்து கீழே விழுந்ததில் அங்கு படுத்திருந்தவர்கள் மீது விழுந்தது.

    இதில் ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 28) பேக்கரி தொழிலாளி, பொள்ளாச்சி கூட்டூர் தென்சங்க பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) எலக்ட்ரிஷியன், ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி அடுத்த பாலப்பாளையம் பழனியப்பன் (60) கூலி தொழிலாளி, ஈரோடு எஸ்.கே.எம். காலனியை சேர்ந்த ராமாயி (70), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்த விஜய்பாபு (56) தறிதொழிலாளி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் விஜய்பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். ஈரோட்டில் தறி பட்டறையில் வேலை பார்க்க வந்த இவர் இரவு நேரத்தில் ஊருக்கு போகாமல் ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து தூங்கினார். மேல் சிகிச்சைக் காக இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×